பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 109 அனைவரும் கூடித் தங்களுக்குத் தலைமை ஏற்கக்கூடிய தகுதி அவர்டால் உண்டு என்ற முடிவுக்கு வந்து தலைமைப் பதவியை அவருக்குத் தருவது. இந்த இரண்டுவகையிலும் சேராத ஒரு தலைவனும் உண்டு. பிரபஞ்சத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் மூலகாரணமாயிருந்து, அவ்வுயிர்கள் நன்கு வாழத் தனு, கரண, புவன, போகங்களைப் படைத்து, பிறகு பிரள யத்தை ஏற்படுத்தி அந்த உயிர்கள் ஒய்வு கொள்ளுமாறு செய்கின்றவன் இயல்பாகவே அவ்வுயிர்களுக்குத் தலைவ னாகிறான். எவ்வுயிர்க்கும் இயல்பாகவே தலைவனாக இருக்கின்ற அவன், எதைப் பூசினால் என்ன? எதைப் பூண்டால் என்ன? என்ன பேசினால்தான் என்ன? அவனே தலைவன்’ என்றவாறு. 256. என் அப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன் துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என் எடி மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ 2 துன்னம் பெய்-தைக்கப்பெற்ற துன்னுபொருள்-பொருளோடு தொடர்புடைய வான்சாடு-தூய்மையான அரை நாண், மன்னு கலைஎன்றும் அழியாது நிலைபெற்ற ஞானக்கலை. இப்பாடலில் முன்னையபாடல் போல் முதலிரண்டு அடிகள் வினாவை உட்கொண்டுள்ளன. தோழி: உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் அவனால் படைக்கப்பட்ட காரணத்தால் 'என் அப்பன்' என்று உறவு கொண்டாடுகின்றன. அந்த உயிர்கள் வீடுபேறடைய அவனே பற்றுக்கோடாய் இருத்தலின் “எம்பிரான்' என்கின்றன. அவ்வுயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒப்பினாலும்