பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஒப்பாவிட்டாலும் அவனே ஈசனாவான், அப்படிப்பட்ட அவன், அரைஞாண் கயிற்றில் ஒரு கோவணத்தை அணிந்திருப்பது எவ்வளவு பொருத்தமற்றது! அனைத்து உயிர்க்கும் தலைவனாகவும் ஈசனாகவும் இருக்கும் ஒருவன் தன் பதவிக்கு ஏற்பப் பொருத்தமான உடையை அணியவேண்டாவா? தலைவி. வேதம் சொல்லும் பொருளையும், நிலை பேறுடைய கலைஞானங்ளையும் கோவணம் ஆகவும், நான்கு வேதங்ளை அரைஞாணாகவும் கொண்டுள்ளான். மறை நான்கும் 'வான் சரடு ஆனதற்கு ஒரு காரண முண்டு. வேதம் என்பது அதில் சொல்லப்பட்ட பொருளைவிட ஒசையால் சிறந்து நிற்பதாகும், ஒதிய ஞானமும், ஞானப் பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும்’ (திருமுறை:4-92-17) என்று நாவரசர் பெருமான் கூறுவதால் ஒலிச்சிறப்பே வேதத்திற்கு முக்கியம் என்பது பெறப்பட்டது. ஒலி என்பது நீண்டு செல்லும் இயல் புடையதாகலின், வேதம் வான் சரடு என உருவகிக்கப் பெற்றது. கலைஞானமும் வேதத்தில் அடங்கியுள்ள பொருளும் பல்வேறு கருத்துக்களை விரித்துக் கூறுவதாலும் அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து நிற்பதாலும் கோவணமாக உருவகிக்கப்பெற்றன. - சொல்லும் (ஓசையும்) பொருளுமாக விரிந்து வடிவுகொண்டு நிற்பது இப்பிரபஞ்சமாதலின் அதுவே அவனுக்கு உடையாயிற்று என்க. பிரபஞ்சம் முழுவதையும் உடையாகத் தரித்த ஒருவன் இயல்பாகத் தலைவனாக இருப்பது அவனுக்கு ஏற்றதே என்க.