பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 111 257. கோயில் சுடுகாடு கொல் புலித் தோல் நல் ஆடை தாயும் இலி தந்தை இலி தான் தனியன் காண் ஏடி தாயும் இலி தந்தை இலி தான் தனியன் ஆயிடினும் காயில் உலகு அனைத்தும் கல் பொடி காண் சாழலோ 3 சுடுகாடு-சர்வசங்கார காலத்து எல்லாம் ஒடுங்கிய இடம் காயில்கோபித்தால். இப்பாடலில் முன்னிரண்டு அடிகள் தலைவனாக இருக்கக்கூடிய தகுதி எதுவுமில்லை என்று ஏசுவதாயிற்று. தோழி: தலைவி: தலைவனாக இருக்கின்ற ஒருவனுக்குக் குறைந்த பட்சம் அவன் தங்குவதற்கு ஒரு அரண்மனை யாவது இருத்தல் வேண்டும். நீ, தலைவன் என்று சொல்கின்றவனுக்கு சுடுகாடுதான் சொந்த விடு. அரசர்க்குரிய ஆடையென்று ஒரு 崎}」リ ஆடையை இந்நாட்டவர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆள் பாதி, ஆடை பாதி என்பது இந் நாட்டின் முதுமொழி. ஆனால், நீ சொல்லும் தலைவனுக்குக் கேவலம் வேடுவர்கள் அணியும் புலித்தோலே நல்லாடை ஆயிற்று. அன்றியும் இந்நாட்டு வழக்கப்படி, அரசப்பதவி என்பது, பரம்பரை பரம்பரையாக வரவேண்டிய ஒன்று. நீ சொல்லும் தலைவனுக்குத், தாயும் இல்லை, தந்தையும் இல்லையென்றால் பரம்பரை எங்கிருந்து வந்தது? நீ சொல்வது உண்மைதான். எம் தலைவனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. இவர்கள் இருவர்மட்டும் இல்லை என்பதில்லை. உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை. அவன் தனியன் என்பதும் உண்மைதான். ஆனாலும், என்ன? ஒருவன் தலைவனானது அவன் அரண்மனையைக் கொண்டோ, ஆடை