பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆபரணங்களைக் கொண்டோ, தாய் தந்தையரைக் கொண்டோ அல்ல. அனைவரையும் வெல்லும் ஆற்றல் யாருக்கு உண்டோ, அவனே தலைவனாவான் என்பதை நீ அறியாயோ? எம் தலைவன் தனியன் என்பது உண்மைதான். ஆனால், அவன் ஒருவன் காய்ந்தால் (சினந்தால்) இப்பிரபஞ்சம் முழுவதும் பொடிசூரணம் ஆகிவிடும் என்பதை நீ அறிதல் வேண்டும். 258. அயனை அனங்கனை அந்தகனை சந்திரனை வயனங்கள் மாயா வடுச் செய்தான் காண் ஏடி நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால் சயம் அன்றோ வானவர்க்குத் தாழ் குழலாய் சாழலோ 4 அயன்-பிரமன். அநங்கன்-மன்மதன். அந்தகன்-யமன். நயனம் கண். இப்பாடலின் இரண்டாவது அடி வயனங்கள் மாயா வடுச்செய்தான் கானேடீ" என்பதாகும். இத்தொடர் எளிதாகப் பொருள்கொள்ளும் வகையில் அமையவில்லை. தோழி! நீ சொல்லும் தலைவன், தன்னிலும் கீழ்ப்பட்டுள்ள தலைவி: நான்முகனின் தலையைக் கிள்ளியும், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியும், இயமனைக் காலால் உதைத்தும், சந்திரனைத் தரையில் போட்டுத் தேய்த்துக் களங்கத்தை உண்டாக்கியும் துன்புறுத்தினான். அவர்கள் உடம்பில் நிலையான வடு (மாயா வடு) இருக்குமாறு செய்துவிட்டான். அந்த வடு நிலைத்துநிற்பதால் உன்னுடைய தலைவனுக்கு வயனங்கள் (பழிச்சொற்கள்) நிலைத்துவிட்டன என்பதை நீ அறியவேண்டும். நீ அறியாமல் பேசுகிறாய். தலைவன் நயனங்கள் மூன்றுடையவன். அவனது மூன்றாவது கண்