பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எச்சன்-யாகஆச்சாரியன். மிகைத்தலை-இழிந்த ஆட்டுத் தலை, எசசன-தககன. இப்பாடலின் இரண்டாவது அடியிலுள்ள தொக்கு என’ என்ற தொடர் ஒரளவு குழப்பத்தை உண்டாக்குகிறது. 'தொக்கு என்ற சொல்லுக்குத் துவையல் என்ற ஒரு பொருளும் உண்டு. தோழி: தக்கன் வேள்வியில் ஈசனால் அனுப்பப்பட்ட வீரபத்திரர் மூன்று காரியங்களைச் செய்தார். அவையாவன: தக்கனையும், எச்சனையும் தலையறுத்தார்; வந்த தேவர் கூட்டத்தை துவையல் என்று சொல்லும்படியாகத் தொக்கு என துவைத்தார். எஞ்சிய மானிட முனிவர் களைத் தலைதெறிக்க ஒடுமாறு செய்தார். இது பழியாகுமன்றே! தலைவி வந்த தேவர் கூட்டத்தைத் தொக்கு என அரைத் தாலும், தக்கனைப் பொறுத்தமட்டில் ஆட்டுத் தலையைப் பொருத்தினான். தேவர்கள் அமரர் களாதலின் அவர்களைத் துவையல்போல் துவைத்தானே தவிரக் கொல்லவில்லை. வினாவிலும் விடையிலும் வந்தவர் தம்மை’ என்ற சொல் மடக்குக் காரணமாக இருமுறை பயன்படுத்தப் பெற்றாலும், இடத்திற்கேற்ப முதலில் வரும் வந்தவர் தம்மை என்பதற்கு முனிவர்களை என்று பொருள் காணப் பெற்றது. இரண்டாவது வந்தவர் தம்மை என்பது அமரர்களுக்கு உரியதாக்கப்பட்டது. 260. அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய் நிலம் முதல் கீழ் அண்டம் உற நின்றது தான் என் ஏடி நிலம் முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம் சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ 6