பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 115 கீழண்டம்-கீழே பாதளம்வரையிலும் உள்ள அண்டங்கள். சலமுகம். சினம்காரணமாக. ஆங்காரம்-செருக்கு. இருவர்-அயனும் திருமாலும். தோழி: தலைவி: மாலும் . |யனும் தம்முள் யார் பெரியவர் என்று போரிட, அவர்கள் எதிரே, அவர்கள் இன்னது என்று அறியமுடியாதபடி, அண்டத்தின் கீழும், அண்டத்தின் மேலும் ஒருசேரத் தீத்துரணாய் (அக்கினி ஸ்தம்பம்) நின்றது சரியோ? இங்ங்ணம் அக்கினி ஸ்தம்பமாய் நில்லாவிடின் அயனும் மாலும், பெருங்கோபம் காரணமாக, தம்மிடத்துத் தோன்றிய அகங்காரத்தை ஒழித்திரார். 261. மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி சலமுகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடி சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலனேல் தரணி எலாம் பிலமுகத்தே புகப் பாய்ந்து, பெரும் கேடு ஆம் சாழலோ 7 மற்றொருத்தி-கங்கை. பிலம்-பாதாளம் தோழி: மலைமகளை, அவன் தன் ஒரு பகுதியாக வைத்துக் கொண்டிருப்பதை அறிந்தும், கங்கை என்பவள் வஞ்சனையால் அவனுடைய சடாபாரத்தில் வந்து தங்கியது நியாயமோ? (பூமிக்கு வர வேண்டும் என்று பகீரதன் தவம் செய்ய, சினங்கொண்ட கங்கை, உலகத்தை அழிக்கவேண்டும் என்ற வஞ்சனையான எண்ணத்தை மறைத்துக் கொண்டு கீழ்நோக்கிப் பாய்ந்தாள். அவள் நினைவு ஈடேறாமல் இருக்கவே சிவபெருமான் அவளைச் சடையில் தாங்கினான். ).