பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தலைவி. மிக்க கோபத்தோடு தேவ உலகிலிருந்து வந்த கங்கை, அவனுடைய சடையுள் பாயாமல் நிலவுலகில் நேரே பாய்ந்திருந்தால், அவள் வேகம் தாங்கமாட்டாமல் இந்நிலவுலகம் பாதாளத்திற்குச் செல்லும் பாதையில் உருண்டு ஒடியிருக்கும். அவன் அவளைச் சடையில் தாங்கியது இவ்வுலகத்தைக் காக்கவே தவிர, வேறு கருத்திலன்று. 262. கோலாலம் ஆகி குரை கடல்வாய் அன்று எழுந்த ஆலாலம் உண்டான் அவன் சதிர்தான் என் ஏடி ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் விடுவர் காண் சாழலோ 8 G5TಖTಖಹಿ-6ಹTಉT5೧ು. குரை கடல்-ஒலிக்கின்ற கடல். ஆலாலம்-விஷம். சதிர்-திறமை. விடுவர்-அழிவர். தோழி: மிக்க ஆர்ப்பாட்டத்துடன் தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் பாற்கடலைக் கிடைய, அதில் தோன்றிய ஆலகாலத்தை அன்று உண்டான். அமிழ்து வரப்போவதை அறிந்தும் அதனை உண்ணாது ஆலத்தை (நஞ்சை) உண்டது பித்தர் செயல் அல்லவோ? தலைவி. ஆலாலம் உண்டது அவன் திறலை வெளிப் படுத்துவதற்காக அன்று. அவ்வாறு உண்டிலனேல் மால், அயன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அன்றே இறந்திருப்பர். அமரர் என்ற சொல்லும் தோன்றியிராது. இந்த அருங்கருத்தை அடிகளுக்கு அறுநூறு ஆண்டுகள் முற்பட்ட இளங்கோவடிகள் பின்வருமாறு சொல்லி வியக்கிறார்: - -