பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 264. தான் அந்தம் இல்லான் தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான் காண் ஏடி ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள் வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ 10 அந்தம்-முடிவு. உந்து-உயர்ந்த. திருச்சாழல் முழுதும் வினா விடையாக அமைந் திருக்க வேண்டும் என்று கருத்தில், இதற்கு உரைகண்ட உரைகாரர்கள், எவ்வித வினாவும் இல்லாத 264 ஆம், 270 ஆம் பாடல்களுக்கும் அவற்றை வினாவாகக் கொண்டே உரை வகுத்துள்ளனர். இப்பாடல்கள் அகத்துறையைச் சேர்ந்தவை என்று கொண்டதால் 'ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான்' என்பதற்குக்கூடத் தலைவி பெற்ற இன்பம் எனப் பொருள் கூறினர். இப்பாடல்களை அகத்துறையில் சார்த்திப் பொருள் கூறுதல் சிறப்புடையதாகத் தெரியவில்லை. இறையனுபவத்தால் ஏற்பட்ட ஆனந்தத்தைப் பலப்பல பாடல்களில் கூறியுள்ளார் அடிகளார். இப்பாடலும் அவ்வாறே. இப்பகுதியின் முதற் பாடல் முதல், ஒன்பதாம் பாடல் முடிய இறைவனின் சிறப்பும் மாபெருங் கருணையும் அவன் எல்லா உயிர்கட்கும் தலைவனாம் தன்மையும் வினாவிற்கு விடையாகக் கூறப்பெற்றுள்ளன. இவ்வாறு பாடிக்கொண்டுவந்த அடிகளாருக்கு அத் துணைப் பெரிய தலைவன், தம்மையும் ஒரு பொருளாக்கி, இறையனுபவ ஆனந்தம் பெறுமாறு செய்தது நினைவுக்கு வருகிறது. அந்நினைவு தோன்றியவுடன் எழுந்த இப்பாட லில் வினாவோ விடையோ எதுவுமில்லை; நிகழ்ந்தது கூறப்பெற்றுள்ளது. அதனால் வியப்பே மேலிடுகிறது. அந்த "מא" "יא