பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 266. கான் ஆர் புலித் தோல் உடை தலை ஊண் காடு பதி ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும் வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ 12 கான் ஆர் புலி-காட்டில் வசிக்கின்ற புலி. ஊண்-உண்ணுங் கலம். பதி-உறைவிடம். வானாடர் கோ-இந்திரன். தோழி: (ஒருவன் தலைவி காட்டில் வாழும் புலியின் தோலே உடை, பிச்சையேற்று உண்னும் உண்கலம் மண்டை ஒடு; குடியிருக்கும் இடமோ சுடுகாடு. இப்படிப்பட்ட ஒருவனை யார் தலைவனாக ஏற்றுக்கொள்வர்? தலைவன் என்றால், அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு தொண்டர் அல்லது அடியவர் பலர் இருத்தல் வேண்டும். ஒருவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது இரு வகையான் நடைபெறும். உள்ளன்பு காரணமாக ஒருவனைத் தலைவன் என்று ஏற்றுக்கொள்ளலாம். அன்றி, அவன் மாட்டுக் கொண்ட அச்சம் காரணமாகத் தலைவன் என்று ஏற்றுக்கொள்ளலாம். பண்படாத சாதாரண மக்கள் அச்சம் காரணமாகவே இறை நம்பிக்கை கொண்டுள்ளனர். பண்பால் உயர்ந்த பெரியோர் எதற்கும் அஞ்சுவதில்லை. ஆதலால், மாசு மறுவற்ற அன்பு காரணமாகவே இறைவனைத் தலைவன் என்று ஏற்றுக் கொள்கின்றனர். இது எவ்வாறாயினும், இருசாராரும் தலைவன் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், அஞ்சி, அவனை ஏற்றுக் கொண்டவர்கள், தலைவனுக்குரிய சில