பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 121 265. நங்காய் ஈது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் காண் ஏடீ கங்காளம் ஆமா கேள் கால அந்தரத்து இருவர் தம் காலம் செய்யத் தரித்தனன் காண் சாழலோ 11 கங்காளம்-எலும்புக்கூடு. தோள்மேலே காதலித்தான்-தண்டபாகத் தோள்மேலே சாத்தியவன். இருவர்-பிரம விஷ்ணு ஆகிய இருவர். முதல் ஒன்பது பாடல்களைப்போல் இதுவும் வினா விடையாக அமைந்துள்ளது. தோழி: தலைவி. பிரபஞ்ச காரணனாகிய ஒருவன்அனைவர்க்கும் அனைத்திற்கும் தலைவன் என்று சொல்லப் பெறும் ஒருவன், கண்டோர் அஞ்சவும், வெறுக்கவும், எள்ளவும் கூடிய ஒரு அலங்காரத்தைச் செய்துகொள்ளலாமா? நீ சொல்லும் தலைவன் என்பவன் உமையோடு இருப்பினும், ஏகனாய்த் துறவுக்கோலத்து இருப்பினும் அவன் அணிந்துள்ளவை இரண்டு நிலைக்கும் பொருந்தாமையை நீ அறிய வேண்டும். இது என்ன தவக்கோலம்? எலும்புகளைச் சேர்த்து நரம்பாற் கட்டி அதனை மார்பில் மாலையாக அணிந்ததுபோக, இரண்டு எலும்புக்கூடுகளைத் தோள்மேலும் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? தோழி! சற்று சிந்தித்துப் பார்! நீ எலும்புக்கூடு என்று சொல்வது எதனை என்று தெரியுமா? அவை நான்முகன் திருமால் ஆகியோரின் எலும்புக்கூடுகளேயாம். அவர்கள் தெய்வங்களே ஆயினும், அவர்கட்கும் முடிவு உண்டு என்பதைக் காட்டவே, அவர்கள் கூடுகளை அணிந்துள்ளான் என்பதை அறிவாயாக,