பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பாடலின் இரண்டாம் அடியும் மூன்றாம் அடியும் மடக்காக வந்தாலும் இவற்றுள் ஒரு சிறு வேறுபாட்டைச் செய்து ஒரு மாபெருங் கருத்தைப் பெறவைக்கிறார். 'ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான்’ என்பது இரண்டாவது அடி மூன்றாவது அடி இதனினும் சற்று மாறுபட்டு 'ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள்’ என்று வருவதைக் காணலாம். அந்தம் இல்லாதவன், நாயனைய தமக்குத் தலையளி செய்து, ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான் என்று தலைவி கூறியதைக் கேட்டவுடன் தோழியின் மனத்தில் ஒரு வியப்புப் பிறந்தது. அவன் எப்படி இருப்பான், எத்தகைய பண்புடையவன், தலைவிக்கு எவ்வாறு இந்த ஆனந்தத்தைத் தந்தான், என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்கும் தோழிக்கு மூன்றாம் அடியில் தலைவி விடை கூறுகிறாள். தோழி! நீ அவனைப் பற்றிக் கற்பனை செய்யத் தேவையில்லை. அவனை நான்கடிட முழுவதுமாகக் கண்டதில்லை. அப்படியானால் எனக்கு இதனை யார் செய்தார் என்று நினைக்கிறாயா? அதுதான் வேடிக்கை. தலைவனே செய்யாத ஒரு காரியத்தை அவன் திருவடிகளே செய்துவிட்டன. - உயிர்களை ஆட்கொள்ளும் திருவடிப்பெருமை இதுவேயாம் என்றவாறு. தோழி! இன்னுமொரு வியப்பு. வான ஊர்த்தியில் ஏறி விண்ணில் பறக்கும் தேவர்கள்கூடக் கண்டறியாத அத்திருவடி மண்ணிடை வந்து தங்கி என்னை ஆனந்த வெள்ளத்து அழுத்திற்று என்றால், அதன் கருணை இருந்தவாறு என்னே!"