பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 125 இயங்குவதில்லை. சக்தி வெளிப்பட்டு இயங்கும்போது பொருள் (சிவம்) தெரிவதில்லை. பொருளிலிருந்து சக்தி யைப் பிரிக்க முடியாது என்றாலும், இயக்கம் நடைபெறவேண்டுமானால் சக்தி மேம்பட்டுப் பணிபுரியவேண்டும். கலைஞானம் கண்ட உண்மை இதுவேயாகும். அதனைக் கண்டோர், அவை இரண்டும் ஒன்று என்பதை அறியாமல் இரண்டு என்றே கருதுகின்றனர். கலைஞானம் கூறும் இரட்டைகள் ஒன்றுசேர்ந்தே தீரவேண்டும் என்பதை அறிவிப்பதற்காகவே மலைமகளை மணமுடித்தான். 268. தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன் தான் புக்கு நட்டம் பயிலும் அது என் ஏடி தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம் ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ 14 பணை-வயல். நட்டம்-நடனம். ஊட்டாம்-உண்ணப்படும் உணவாம். தில்லைக்கூத்தன் காளியோடு நடனப்போர் செய்து அவளை வென்றான் என்பது கதை, அக்கதையை அடிப்படையாகக் கொண்டது இப்பாடல். தோழி: தலைவி! தில்லைச் சிற்றம்பலவன் காளியை எதிர்த்து நட்டமாடியது அவனுடைய தலைமைக்குப் பொருத்தமற்ற தல்லவா?. தலைவி தோழி! காளிதேவி தாராகாசுரனைக் கொன்ற பின்னர் அவன் உதிரத்தைக் குடித்து வெறி கொண்டு உலகை அழிக்கத் தொடங்கினாள்! அவளுடைய வெறியை அடக்க நடனப்போர் செய்து வென்றான். அவன் அவ்வாறு செய்யா