பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 விடின் உயிர்கள் அனைத்தும் காளிக்கு இரை யாகியிருக்கமல்லவா? அணுவுக்குள் இருக்கும் சக்தி வெளிப்பட்டு ஒர் எல்லைக்குள் இருக்கும்போது பேருதவி புரிகின்றது. அதே சக்தி எல்லை மீறுகின்றபோது அணுகுண்டாக மாறி அழிவைச் செய்கின்றது. இதே கருத்தைத்தான் காளி வெறிகொண்ட கதை புலப்படுத்துகின்றது. சிவத்திலிருந்து வெளிப்படும் சக்தி எல்லை மீறுமேயானால் சிவம் அதனை அடக்கி ஆளுகிறது. 269. கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடி தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில் இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ 15 கடகரி-மதம் ஒழுகுகின்ற யானை. பரிமா-குதிரை. தோழி: தலைவி தலைவனாக இருக்கின்ற ஒருவன் விரும்பி ஏறும் வாகனம் தேர் அல்லது குதிரை அல்லது யானையாக இருத்தல் வேண்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இடபத்தை வாகனமாகக் கொண்டது ஏன்? தலைவி தோழி! இவை அனைத்தும் அவனுக்கு உண்டு. ஆனால், திரிபுரத்தை அழிக்கப் புறப்பட்ட போது, திருமால், தான் இடபமாக இருந்து சிவபெருமானைத் தாங்கிச் செல்ல வேண்டு மென்று விரும்பினார். எந்த வாகனமும், எந்தப் படைக்கலமும் இல்லாமல் திரிபுரத்தை அழிக்க முடியுமென்றாலும் திருமாலின் மகிழ்ச்சிக்கு இடம்கொடுக்கும் வகையில் அப்பொழுது இடபவாகனத்தில் ஊர்ந்தார்.