பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 127 270. நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் 始 * * 海 * * s தான ஏடி அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் யிடினும் கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழல்ோ 16 நால்வர்-சனகர், சனாதனர், சனற்குமாரர், சனந்தனர். ஆல்கல்லால விருட்சம், அறம் உரைத்தான்-ஞானோபதேசஞ் செய்தவன். கூட்டோடு-அடியோடு. இப்பாடலில் வினா இல்லை; ஆயினும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகின்ற முறையிலேயே ஒர் ஐயத்தைக் குறிப்பாகப் பாடல் வெளிப்படுத்துகின்றது கல்ஆல மரத்தின் அடியிலிருந்து சனகாதி முனிவர் நால்வர்க்கும் அறத்தைப் போதித்தான் என்பது முன்னிரண்டு அடிகளின் பொருளாகும். பகை-நட்பு, துன்பம்-இன்பம், செல்வம்-நல்குரவு ஆகியவற்றை ஒன்றெனக் கருதும் உயர் தகுதி படைத்தவர் சனகாதி முனிவர் நால்வருமாவர். பகை, நட்பு என்ற இரண்டையும் கடந்து நிற்பவர் கட்கு அறமுரைக்கின்ற ஒருவன் தானும் அவற்றைக் கடந்தவனாகத்தானே இருத்தல் வேண்டும்? அப்படி, அனைத்தையும் கடந்துநிற்கும் ஒருவன் நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைப் போக்கி அருள்வானா என்ற ஐயம் தோன்றுவது இயல்பேயாகும். அவனோ இன்ப துன்பங்களைக் கடந்தவன்; இவை இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறியாதவன். அப்படியிருக்க நம்மாட்டுக் கருணை கொண்டு அருள் செய்வானோ என்ற குறிப்பான வினாவிற்கு அடுத்த இரண்டடிகள் விடை கூறுகின்றன. g