பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆலின் கீழிருந்து அறமுரைத்தது உண்மைதான். இரட்டைகள் என்று சொல்லப்படுபவற்றைச் சீடர்களும் வென்றவர்கள்; குருவும் வென்றவர்தான். என்றாலும், ஆன்மாவை முன்னேறாமல் தடுக்கும் ஆணவத்தை ஒடுக்கக்கூடியவன் இவன் ஒருவனே, ஆதலால் அதற்குரிய ஒர் உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறார். திரிபுராதிகள் ஆணவத்திற்கு ஒர் அடையாளம் 'முப்புரமாவது மும்மல காரியம் (திருமந்திரம்:343) என்பது திருமூலர் வாக்கு. எனவே, ‘புரமூன்றுங் கூட்டோடு' அழித்தான் என்றால், விருப்பு வெறுப்பற்ற துறவின் எல்லையில் நிற்கும் அவன், அழித்து அருள்செய்ய வேண்டிய இடத்தில், அழித்தும் அருள் செய்கிறான். இது மறக்கருணையின்பாற்படும் என்க. 271. அம்பலத்தே கூத்து ஆடி அமுது செயப் பலி திரியும் நம்பனையும் தேவன் என்று நண்ணும் அது என் ஏடி நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியா எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ 17 நம்பன்-நம்பப்படத்தக்கவன். தேவன்-கடவுள். பலி-பிச்சை. ஆமா கேள்-ஆகுமாறு கேட்பாயாக தோழி: ஒரு சாதாரண தலைவனுக்குகூடத் தங்குவதற்கு ஒரு பெரிய இடமும், உண்பதற்கு வேண்டிய சகல வசதிகளும் இருக்கும். ஆனால், தலைவி நீ சொல்லும் தலைவன் ஒரு மேற்கூரைகூட இல்லாத திறந்த வெளியில் (அம்பலத்தில்) கூத்தாடுகிறான். கூத்தாடும் இவனுக்கு உண்ணத் தான் உணவு உண்டா? பிச்சை எடுத்தல்லவா உண்கிறான்? மேற்கூரையில்லாத வீடு, பிச்சை உணவு-இவனும் ஒரு தலைவனோ!