பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 129 தலைவி தோழி! நீ சொல்வது சரிதான். ஆனால், ஒரு வேடிக்கை தெரியுமா? எல்லோரும் போற்றும் அபெளர்ஷேயம் என்று சொல்லப்பெறும் வேதம் எவ்வளவோ முயன்றும், திறந்த வெளி யில் நட்டமாடி, ஊர் ஊர்தோறும் பலிக்கு உழலும் இவனை ஏனோ கண்டதே இல்லை. தொன்று தொட்டு இந்த நான்கு வேதங்களும் அவனைக் காணாததுமட்டு மன்று. 'எம் பெரு மான் ஈசா என்று கூக்குரலிட்டு அழைத்தும் அவனை நெருங்கியபாடில்லை. வேதங்களே இப்படியென்றால், ஏனையோரைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. வேதங்களும் ஏனையோரும் ‘எம்பெருமான் ஈசா என்று ஓலமிட்டு அலையும் நிலையில் உள்ளன என்றால், அந்தத் தலைவன் வெட்ட வெளியில் நட்டமாடினால் என்ன? பிச்சை யெடுத்தால் என்ன? அவனே யாவர்க்கும், யாவற்றிற்கும் தலைவன் என்பது தெரியவில்லையா? இதே கருத்தைச் சேக்கிழார் பெருமான் மிக அழகாக 'மன்றுளே மால் அயன் தேட, ஐயர் தாம் வெளியே ஆடுகின்றார்”என்று கூறியுள்ளமை நினைப்பதற்குரியதாகும். 272. சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடி நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடிக்கீழ் அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ 18 சலம்-வஞ்சகம். தடிந்த-கொன்ற ஆழி-சக்கராயுதம், நயனம் இடந்து-கண்ணைத் தோண்டி.