பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தோழி: தலைவி! சலந்தாசுரனை பிளந்த சக்கரப் படையைத் திருமாலுக்கு ஏன் தாவேண்டும்? தலைவி தோழி! கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பது தெரிந்திருந்தும் திருமால், தன் கண்ணையே பறித்து அருச்சனை செய்தான் ஆதலின், அவனுக்குக் சக்கரப்படையை ஈந்தது தலைவனது வள்ளன்மையைக் குறிக்கும். நாரணன் நாள்தோறும் ஆயிரம் தாமரை கொண்டு இறைவனை அருச்சித்துவந்தான். ஒருநாள் ஒரு மலர் குறைய, அதனை ஈடுசெய்யவேண்டித் தன் கண்ணும் தாமரை என்ற காரணத்தால் கண்ணைப் பறித்து அருச்சித்தான். அது கண்டு மகிழ்ந்த இறைவன் சக்கரப் படையை அவனுக்கு ஈந்தான் என்பது புராண வரலாறு. 273. அம்பரம் ஆம் புள்ளித் தோல் ஆலாலம் ஆர் அமுதம் எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடி எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது - செய்திடினும் தம் பெருமை தான் அறியாத் தன்மையன் காண் சாழலோ 19 அம்பரம்-ஆடை. புள்ளித்தோல்-புள்ளிகளையுடைய புலித்தோல். தோழி: தலைவி புள்ளிகளை உடைய புலித்தோலோ ஆடை, ஆலகால நஞ்சோ உணவு. இவ்வாறிருப்பது திறமையா? சாமர்த்தியமா? சிக்கனமா? (சதிர் என்ற சொல்லுக்கு இந்த மூன்று பொருளும் உண்டு) எது கருதி என்பதைச் சொல்வாயாக. தலைவி தோழி! அவன் எதை உண்டால் என்ன? எதை அணிந்தால் என்ன? இப்பிரபஞ்சத்தில் வேறு