பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 131 யாருக்கும் எவருக்கும் இல்லாத தனிச்சிறப் பொன்று இவனுக்குண்டு. அச்சிறப்பு இவன் ஒருவனுக்கே உண்டு. அதுதான் தன் பெருமை தான் அறியாது இருத்தல் என்பதை அறிவாயாக. 'தன் பெருமை தான் அறியாத் தன்மை என்ற சிறிய தொடர் மிக ஆழமான பொருளை உடையது. பெருமை என்று சொல்லும்போது அது பண்புப்பெயர். அப்பண்புக் குரிய பண்பி ஒருவன் இருத்தல் வேண்டும். பொதுவாகப் பண்புகள் தனியே இயங்குவதில்லை. ஒரு பண்பியை ஒட்டியே பண்புகள் நிலைபெறும். பெருமை என்ற ஒரு பண்பு, பெருமை உடையவ னாகிய ஒருவனை இணைந்து நிற்பதாகும். உலகத்திலுள்ள எல்லா உயிர்கட்கும் சில பண்புகள் இணைந்தே நிற்கும். பண்பே இல்லாத ஒருவன் இருப்பது இயலாத காரியம். வேறுள்ள பண்புகளையெல்லாம் ஒருவன் துறந்துவிட்டா லும்கூட ஆணவம் என்ற பண்பு இறுதிவரை அவனைச் சுற்றியே நிற்கும். இது உயிர்களின் பொது இலக்கணம். இறைவன் குணம், குறி கடந்தவன் ஆதலால், அவனிடம் எந்த ஒரு பண்போ குணமோ இணைவ தில்லை. பெருமைக்குரியவன் என்று நாம் சொல்லும்போது, நமக்குத் தெரிந்த, நாம் விரும்பும், மிக உயர்ந்தது என நாம் கருதும் பெருமை என்ற பண்பை நாம்தாம் அவனுக்கு ஏற்றுகின்றோமே தவிர, அவனுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. தனக்கு என்று பெருமை, சிறுமை முதலிய எதுவும் இல்லாதவன் ஆதலால், அந்தப் பெருமையை அவன் அறியுமாறில்லை. இதுவே அவனுடைய இறைப்பண்பு ஆகும. * : * *