பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 'தன் பெருமை தானறியாத் தன்மையன்' என்று அடிகளார் கூறினாரேனும், அதன் உண்மைப் பொருள் இதுவேயாகும். இவ்வாறில்லாமல் தன் பெருமையின் எல்லையை அறியாதவன் என்று பொருள் கூறுவேமேயானால் அவன் பெருமைக்கு ஓர் எல்லை வகுத்த தவற்றைச் செய்கிறோம். அதுவுமன்றி அறியாதவன் என்ற சொல்லால் அறியா மையை அவனுக்கு உரிமையாக்குகின்றோம். இவ்விரண்டும் இங்குப் பொருந்தாமை அறிதல் வேண்டும். 274. அரும் தவருக்கு ஆலின்கீழ் அறம் முதலா நான்கினையும் இருந்து அவருக்கு அருளும் அது எனக்கு அறிய . . . . . . ®ಬಯಿ-Ta அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச் செய்திலனேல் திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ 20 அருந்தவர்-சனகாதி நால்வர். அறம் முதலா நான்கு-அறம் பொருள் இன்பம் வீடு என்பன. மேல் 270 ஆவது பாடலில் வேதத்தின் உட்பொருளாம் அறத்தை உரைத்தான் என்று கூறினார். இப்பாடலில் ஆலின் கீழிருந்தது அவன் உரைத்தது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும்பற்றி என்கிறார். தோழி: தலைவி! அருந்தவமுடையோர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பற்றிக் கூறவேண்டிய தேவை என்ன ?. தலைவி தோழி! அவர்களைப் பொறுத்தவரை பொருளும் இன்பமும் தேவையில்லாமல் - இருந்திருக்கலாம். அறவழி நின்று வீடு அடைதல் ஒன்றே வழியாகும் என்று அவர்கள்