பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இன்பத்தையும் ஒதுக்கினாலொழியத் தங்கள் துறவு முழுத்தன்மை அடையாது என்று அவர்கள் கருதியதாலும் புருடார்த்தங்களில் பொருளும் இன்பமும் இடம் பெற்றிருந்தமையாலும் இவற்றை ஒதுக்கினர். அன்றியும் இல்லறத்திலிருந்தே வீடுபேற்றை அடையமுடியும் என்ற தமிழர் கொள்கைக்கு அவர்கள் போக்கு மாறுபட்ட தாயிருந்தது. இதனை மறுக்கவந்த அடிகளார். அறமுதலா நான்கினையும் அருந்தவர்க்கு உரைத்தான் என்று கூறினார். அத்தோடு அமையாமல் இந்த நான்கினையும் அவர்கள் அறியாவிட்டால் &_Q)é五 இயற்கையை அறியாமல் போய்விடுவார்கள் என்பதையும் கூறினார். உலக இயற்கையாவது தனித்து நிற்கும் எதையும் ஆதரிப்பதில்லை. தோற்றம், வளர்ச்சி இரண்டிற்கும் ஆண், பெண் என்ற இரட்டைகள் தேவைப்பட்டன. ஆண், பெண் என்ற இருவரும் ஒன்றுசேரும்போது வாழ்வின் குறிக் கோளாகிய வீட்டை -3|65)l--Ամ, அறவாழ்க்கையை மேற்கொள்ள வேண்டி வந்தது. நாட்டில் ஒருவனும் ஒருத்தியுமாகச் சேர்ந்து வாழ்க்கை நடத்துகையில் பொருளும் இன்பமும் தேவைப்பட்டன. இவை இரண்டும் அற வாழ்க்கை வாழவும், வீடுபேற்றை அடையவும் இடையூறாக உள்ளன என்று, முன்னர்க் கூறப் பெற்ற, புறத்துறவுடையோர் கருதினர். இல்லறத்தில், வாழ்பவர்களும் பொருளையும் இன்பத்தையும் பெற்று வாழும்போதே அறவாழ்க்கை வாழ்ந்து வீடுபேற்றை அடையமுடியும் என்பதை ஆலின்கீழிருந்து இறைவனே உரைத்தான் என்று அடிகளார் கூறுகிறார். இதனை அருந்தவர்க்கு உரைத்ததன் நோக்கம் பொருளையும் இன்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட இல் வாழ்க்கையும் வீடுபேற்றை அடைய வழியாக அமையும் என்பதை வலியுறுத்தவேயாம்.