பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 'முத்தீ விளக்கில் துஞ்சும்’ (புறம்: 2) என்ற தொடரும் இப்பொருளைத் தருதல் சிந்திக்கந் பாலதாகும். தக்கன் யாகத்தில் எரியில் இடும் அவி உணவை விரும்பி வந்த தேவர்கள், வீரபத்திரரால் தண்டிக்கப் பட்டபோது, சிவனை வேண்டித் தம் துன்பம் தீர்ந்தனர் என்ற பழைய கதை பற்றியதாகும், முதலடி. சிரம் மூன்று அறத் தன் திருப்புருவம் நெரித்தருளி' என்ற தொடர் ஒரளவு குழப்பம் விளைவிப்பதாகும். தக்கன் வேள்வியில் தக்கன், எச்சன் ஆகிய இருவர் தலைகளும் அறுப்பட்டனவே தவிர மூன்றாவது தலைபற்றி விளக்கம் எதுவும் இல்லை. எனவே, தன் திருப்புருவத்தை நெரித்தருளி, சிரமூன்றும் அறுத்தான் என்பது எந்தக் கதையைச் சுட்டி நிற்கிறது என்பதை உறுதியாகக் கூற வழியில்லை. உரு மூன்றுமாகி என்ற தொடர் மிக நுண்மையான ஒரு கருத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளிலும் இவனே உள்ளான் என்கிறார் அடிகளார். எந்த ஒரு பொருளும் இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றில்தான் இருக்க முடியும். அதேபோல், அடுத்த நிலைக்குப் போகவேண்டுமானால் தன் பழைய நிலையை விட்டுத்தான் அடுத்த நிலைக்குச் செல்லமுடியும். தண்ணிர் பனிக்கட்டியாகும்பொழுது அங்குத் தண்ணிர் இல்லை. பனிக்கட்டிதான் இருக்கிறது. ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் உருவமாக உள்ள அதே நேரத்தில் அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கும் பேராற்றல் அவன்பால் உண்டு. தன் இயல்பை ஒருசிறிதும் மாற்றிக்கொள்ளாமல் உருவநிலை, அருவநிலை, அருவுருவ நிலை என்ற மூன்றிலும் ஒரே நேரத்தில் உள்ளான் என்கிறார் அடிகளார்.