பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 143 கருத்தைத்தான் 'நாடி நாடி என்ற தொடரில் அடிகளார் பேசுகிறார். 280. எரி மூன்று தேவர்க்கு இரங்கி அருள் செய்தருளிச் சிரம் மூன்று அறத் தன் திருப் புருவம் நெரித்தருளி உரு மூன்றும் ஆகி உணர்வு அரிது ஆம் ஒருவனுமே புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ 6 இப்பாடலில் வரும் முதலடி எரிமூன்று தேவர்க்கு இரங்கி அருள் செய்து அருளி என்பதாகும். எரிமூன்று என்றதனால் வேதியர்கள் வளர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று நேரங்களுக்குரிய ஆகவனியம், தட்சினாக்கினி, காருகபத்தியம் ஆகிய முத்தி என்றவாறு. இவ்வாறு பொருள் கொள்வதற்கு தேவர்க்கு எரி மூன்று அளித்தருளி' என்று கொண்டு கூட்டுச் செய்ய வேண்டும். இனி இவ்வாறு பொருள் கொள்வதில் ஒரு சிறு குழப்பம் நேரிடுகிறது. இந்த முத்தியையும் தேவர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் விரும்புவதெல்லாம் யாகத்தில் வளர்க்கப்படும் அக்னி குண்டங்களையே ஆகும். தேவர்கள் அதனை விரும்புவதற்கு ஒரு காரணம் உண்டு. ஆடு மாடு முதலியவற்றைப் பலியிட்டு அவற்றின் இறைச்சியை நெய்யோடு சேர்த்து ஓமத் தீயில் இடுவர். 'அவிஷ்' என்ற சொல்லப்படும் இதனை தேவர்கள் விரும்பி உண்ணுகின்றார்கள் என்பது புராணங்களில் பேசப்படுவ தாகும். இவ்வாறு யாகங்கள் செய்து தேவர்களுக்கு அவி உணவைத் தருகின்றவர்கள், தேவர்களால் மிகவும் நேசிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை தேவநாம் ப்ரிய என்று வேதத்தில் வரும் தொடர் குறிப்பதாகும். யாகத்தில் வளர்க்கும் ஓமத் தீயையும், முத்தி என்ற சொல்லால் ஒரு காலத்தில் குறிப்பிட்டனர் போலும். புறநானூற்றில் வரும்