பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருப்பெருந்துறையில் அவன் உட்புகுந்ததை அடிகளாரே பல இடங்களில் குறித்துள்ளார். குதிரைச் சேவகனாக வந்தவனும், கூலியாளாக வந்தவனும் அடிகளார் உள்ளத்தில் உட்புகுந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு பார்த்தால், நாடி நாடி என்ற தொடர் மிகச் சிறந்த ஒர் உட்கருத்தைக் கொண்டு விளங்குவதைக் Jsrrgdora)rrui). வைணவப் பெரியோர்கள் உடைன்மக்கு ஒரு முழுக்கு உடையானுக்கு பத்து முழுக்கு என்று கூறுவது நாடி நாடி என்பதற்குரிய சிறந்த விளக்கமாக அமைந்துள்ளது. ஒருவன் அணிந்துள்ள மோதிரம் கிணற்றுக்குள் விழுந்துவிட்டால் அவன் உடைமையாகிய அது ஒரே முறை தண்ணிருக்குள் மூழ்கி அடியில் சென்று தங்கி விடுகிறது. இதுவே உடைமைக்கு ஒரு முழுக்கு என்பதாகும். ஆனால், மோதிரத்தின் சொந்தக்காரன் நீருள் விழுந்து மோதிரம் கிடைக்கும் வரை நீருக்குள் மூழ்கி மூழ்கி எழுகின்றான் ஆதலின், உடையானுக்கு பத்து முழுக்கு என்பது இதன் பொருளாகும் அதாவது, வழியோடு சென்ற வாதவூரரை, குருநாதர் வலிய வந்து ஆட்கொண்டார் என்பதை அடிகளாரே, வேண்டி என்னைப் பணிகொண்டாய்” என்று கூறுவது மேலே கூறிய கருத்துக்கு அரண் செய்வதாகவே அமைந்துள்ளது. திருப்பெருந்துறையில் திருவாதவூரரை ஆட்கொண்டு, தமது உடைமையாகவே ஆக்கிக் கொண்டார் குருநாதர். இப்பொழுது அடிகளார் உடைமையாகவும், குருநாதர் உடையானாகவும் ஆகிவிட்ட காரணத்தால் உடைமை எங்கே திரிந்தாலும் அதைத் தேடிச் சென்று அருள் செய்ய வேண்டிய கடப்பாடு, உடையானாகிய குருநாதருக்கு வந்து விடுகிறது. இந்த அரிய