பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி - 141 அதனைச் செய்ததாக அடிகளார் இதோ பேசுகிறார். என் வல்வினையின் வாயில் பொடி அட்டி, பூவல்லி கொய்யாமோ என்பதே அவருடை வாக்கு அட்டி என்ற வினையெச்சம் கொய்யாமோ என்ற வினைகொண்டு முடிந்தது. இதற்கு நாம் என்பது தோன்றா எழுவாயாகும். 278. பண்பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல் விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால் புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ 4 பண்பட்ட-இசை உண்டான. எண்பட்ட-எண்ணத்தக்க. அருக்கன்சூரியன். எச்சன்-யாகபுருஷன். இந்து-சந்திரன். தக்கன் வேள்விக் கதையை உட்கொண்டதாகும் இப்பாடல். 279. தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் ஊன் நாடி நாடி வந்து உட்புகுந்தான் உலகர் முன்னே நான் ஆடி ஆடி நின்று ஒலம் இட நடம் பயிலும் வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ 5 தேன்-வண்டு. ஊன்-உடல். ஒலம் இட-உடன் அழைத்துச் செல்லாமையால் ஒலம் என்று கூவ. இப்பாடலில் சிக்கலாகவுள்ள பகுதி ஊன் நாடி நாடி வந்து உள்புகுந்தான் என்பதாகும். நாடி நாடி வந்து என்பதற்கு, திருப்பெருந்துறை, மதுரை, உத்தரகோச மங்கை, கழுக்குன்று ஆகிய இடங்களில் அடிகளாரை நாடி வந்தான் என்று பொருள் கண்டனர் பலர். திருப்பெருந் துறையில் குருநாதர் வடிவுடனும், ஆலவாயில் குதிரைச் சேவகன் வடிவிலும் கூலியாள் வடிவிலும், கழுக்குன்றில் கணக்கிலாப் பல கோலங்களுடனும் வந்து காட்சி தந்தான். திரு உத்தரகோச மங்கையில் எவ்வாறு காட்சியளித்தான் என்பது தெரியவில்லை.