பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அறுத்தான். அறுத்ததோடு நில்லாமல் ஆட்கொள்ளவும் செய்தான். இவ்வாறு செய்வதற்குத் தம்மிடம் என்ன இருந்தது என்று நினைக்கின்றார் அடிகளார். அதற்குரிய தகுதி தம்பால் ஒன்றுமில்லை என்ற நினைவு வந்தவுடன் இதனைச் செய்தவன் தாயைக் காட்டிலும் சிறந்த தயாவுடையவன் என்ற முடிவிற்கு வருகிறார். அடுத்து வரும் பகுதி பல முறை சிந்தித்து மகிழவேண்டிய பகுதியாகும். திருவாதவூரர் என்ற மனிதர், இப்பிறப்பிற்கு முன்னர் எத்தனை பிறப்புகள் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாது. பெரிய அரசப்பணி பூண்ட அவர், அறிந்தும் அறியாமலும் பல நன்மை, தீமைகளைச் செய்திருத்தல் கூடும். இவற்றின் பயனாகவுள்ள பல பிறப்புகள் அடுத்தும் வருதல்கூடும். திருவாதவூரர் என்ற மனிதர் எவ்வளவு பெரிய அமைச்சராக இருந்திருப்பினும், இந்தச் சங்கிலித் தொடரை ஒன்றும் செய்திருக்க முடியாது. காரணம் வினை என்ற சங்கிலித் தொடரின் உள்ளே அகப்பட்டவர் ஆவார் அவர். எதிர்பாராத விதமாக, ஆலவாய்ச் சொக்கன் ஒரிரு விநாடியில் இந்தச் சங்கிலித் தொடரை அறுத்து அதனுள் அகப்பட்டுக்கொண்டிருந்த அவரை ஆட்கொள்ளவும் செய்தான். இதுவரை அடிகளாரைச் சுற்றி நின்ற வினைகள், அடுத்தடுத்து அவருக்கு என்ன செய்யப்போகிறோம், பார்’ என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டிருந்தன. சொக்கன் பிறவியை அறுத்து ஆட்கொண்டவுடன் சப்புக்கொட்டிக்கொண்டிருந்த அந்த வினைகளின் வாயில் மண் விழுந்தது. தம்மைச் சுற்றியிருக்கும் வினையின் வாயில் மண்ணையள்ளிப் போட்டோம் என்று சொல்லும் தைரியம் யாருக்கும் வரமுடியாது. ஆனால், தாமே