பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 139 இந்தச் சுற்றங்களிலிருந்து ஒருவன் தன்னைப் பிரித்துக் கொள்வது மிகமிகக் கடினமான காரியமாகும்; ஏறத்தாழ இயலாதென்றே கூறிவிடலாம். ஆனால், மிகக் கடினமான இக்காரியத்தை, பெருந்துறையான் ஒரே விநாடியில் செய்தான் ஆதலின், அந்த நன்றிப்பெருக்கால் இவ்விரு பாடல்களிலும் அதனைக் குறிக்கின்றார். 'புனையாளன் சீர்பாடி' என்று முதல் பாடலில் வருவதைக் கவனித்தல் வேண்டும். கடலிலோ ஆற்றிலோ நீண்டது.ாரம் நீந்தவேண்டியவர்கள் புனை ஒன்றைப் பற்றிக் கொண்டு நீந்துதல் இயல்பாகும். இத்தனை சுற்றத்தாரையும் ஒரே விநாடியில் விட்டு நீங்கினால் மனத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடம் மனிதனைப் பயித்தி யமாக ஆக்கிவிடும். அவ்வாறு நிகழாமல் அடிகளாரைத் தடுத்தது தில்லைக் கூத்தன் திருவடியாகும். மனத்தின் காலி யான இடத்தைத் திருவடி நிறைத்துக்கொண்டமையின் எவ்விதத் தீங்கும் நிகழவில்லை. . தாய் தந்தை முதல் சுற்றம் வரையுள்ள இவர்கள் மாட்டு ஏற்பட்டுள்ள பந்த பாசம் என்ற பெருங்கடலை, ஒரு புணையின்றிக் கடத்தல் இயலாதாதலின் தில்லைக்கூத்தன் திருவடி புணையாயிற்று என்கிறார். 277. நாயின் கடைப்பட்ட நம்மையும் ஒர் பொருட்படுத்து தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான் மாயப் பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல் வினையின் வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ 3 வல்வினையின் வாயில் பொடி அட்டி-வலிய வினையின் வாயில் மண்ணைப்போட்டு, பொருள்படுத்து-பொருளாக எண்ணி. நாயைவிடக் கடைப்பட்டவராகிய தம்மை ஒரு பொருளாக ஆக்கி, தொடர்ந்து வருகின்றதும் நிலையில் லாததுமாகிய தம்முடைய பிறப்பை ஒரேயடியாக