பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நுண்ணிய கருத்தை வைத்தலுமே என்ற சொல்லிலுள்ள ஏகாரத்தால் பெறவைத்தார். 276. எந்தை எம் தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ 2 பந்தம் அறுத்து-பாசங்களை நீக்கி. பொந்தைப் பரவி-பொந்தாகிய கோயிலை வணங்கி. என்னுடைய தந்தை, என்னுடைய தாய், என்னுடைய சுற்றம் இவற்றோடு நண்பர் முதலிய கூட்டம் ஆகிய அனைவரிடமும் நான் கொண்டிருந்த தொடர்பாகிய பந்தத்தை ஒவ்வொன்றாக நீக்காமல், ஒருசேர அறுத்தெறிந்து என்னை ஆட்கொண்டவன் பாண்டிப்பிரான். அந்தப் பாண்டிப்பிரான் திருஇடைமருதூரில் தேன் நிறைந்த பொந்தாகிய கோயிலில் அமைந்துள்ளான் என்றவாறு. இந்த இரண்டு பாடல்களும், உலகிடை வாழும் மனிதனுக்குச் சுற்றம்’ என்னும் தொடக்கு எவ்வளவு வலுவாக அமைந்துள்ளது என்பதைக் குறிக்கின்றன. சாதாரண, மனிதர்களைப் பொறுத்தமட்டில் பிறப்பால் வரும் சுற்றம், அதனோடு தொடர்புடைய நட்பு எனும் சுற்றம் என்பவற்றோடு-பதவி உயர உயர அதற்குரிய சுற்றமும் நட்பும் விரிந்துகொண்டே செல்லும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பறிபோகும் பதவியைப் போன்றதன்று அடிகளார் மேற்கொண்ட பதவி; திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெற்றிராவிட்டால் இறுதி வரை அடிகளார் அமைச்சராகவே இருந்திருப்பார். ஆகவேதான், பதவிபற்றி வரும் சுற்றத்தை ஏனைய சுற்றத்தோடு இணைத்து சுற்றம் மற்றும் என்று பாடுகிறார்.