பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 137 குறிப்பிடாமல், பிறப்பால் வந்த சுற்றம், பதவியால் வந்த சுற்றம் என்ற இரு திறத்தாரையும் குறிக்கின்றது. துறந்தொழிந்தேன்' என்பது அடுத்துள்ள சொல்லாகும். ஒருசொல் நீர்மைத்தாக இது இருப்பினும், உண்மையில் துறத்தல், ஒழிதல் என்ற இரண்டு சொற்களைக் கொண்டதாகும் இது. துறத்தல் என்பது மனத்தால் துறத்தலையும் ஒழிதல்' என்பது உடலால் துறத்தலையும் குறிப்பனவாகும். அடிகளார், திருவடிப்பேறு கிடைத்த விநாடியே 35ւ-Շմ6մ) նծTեւմ சுற்றத்தை உடம்பினால் மட்டுமல்லாமல் மனத்தாலும் துறந்துவிட்டார். இதனைக் கூறிய பின்னர், பூவல்லி கொய்யவேண்டும் என்று பாடுகிறார். கொய்தலாகிய செயல் உடலைப் பொறுத்ததாகும். மெய்யினால் இப்பணி செய்யப்பெறும் போது மொழியும், மனமும் என்ன செய்கின்றன? மொழி 'புனையாளன்' சீர் பாடுகிறது. எங்கோ அம்பலத்தில் ஆடுகின்றவனின் திருவுருவை மனம் தன்னிடத்தே பதித்துக்கொள்கின்றது. மனம், மொழி, மெய் என்ற மூன்றும் இப்பணியைச் செய்ய எப்படி முடிந்தது? இதுவரை இந்த உடல் அமைச்சர் உடை அணிந்து அதற்குரிய பணியைச் செய்து வந்தது. அமைச்சரின் வாய், மக்கள் குறை கேட்டு அதனைப் போக்க ஆணையிடும் பணியைச் செய்துவந்தது. மனமோ நூற்றுக்கணக்கான சுற்றங்கள்பற்றி நினைத்து மகிழ்ந்து வந்தது. திருவடி தலையில் பட்டவுடன், முதலில் சுற்றம்பற்றிய மனத்திலுள்ள எண்ணம் ஒழிந்தது. அதில் அவன் திருவருள் நிறைந்தது, வாய் அவன் புகழ் பாடிற்று. மெய் பூக்கொய்தல் முதலிய பணிகளில் ஈடுபடலாயிற்று. : திருவடி சம்பந்தம் பெற்றால் அந்த விநாடியே பசு கரணங்கள் பதி கரணங்களாகி விடுகின்றன என்ற