பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 275. இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புனையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ 1 இணை-இரண்டு. புனையாளன்-பிறவிக்கடலை நீந்தப் புனையாக இருப்பவன். பூவல்லி கொய்யாமோ என்ற பகுதியில் வரும் இந்த முதற்பாடல், பழைய நிகழ்ச்சிகள் அடிகளார் உள்ளத்தில் நினைவலைகளாக மீட்டும் தோற்றியதை நினைவுறுத்து கிறது. இணையான திருவடியை அடிகளாரின் தலைமேல் சூட்டியது திருப்பெருந்துறையிலாகும். திருவடி. சூட்டப் பெறுவதற்கு முன்னர், அமைச்சராக இருந்த திருவாதவூரர் திடீரென்று அனைத்தையும் துறந்து மணிவாசகராக எழுகின்றார். திருவாதவூரராகவும் அமைச்சராகவும் இருந்த பொழுது எத்தனை பெரிய சுற்றம்! துணையான சுற்றங் கள்’ என்று அடிகளார் கூறுவது திருவாதவூாருக்குரிய சுற்றம், அமைச்சருக்கு உரிய சுற்றம் ஆகிய இரண்டையும் குறிப்ப தாகும். அதனாலேயே சுற்றம் என்ற பன்மைக்கு மேல் 'கள்' விருதியும் சேர்த்துச் சுற்றங்கள் என்று பேசுகிறார். இந்த இரு திறத்தாரும். அடிகளாரைத் தாங்களே தாங்கிக்கொண்டிருப்பது போலவும், தங்களையே துணை என்று அமைச்சர் கருதிக்கொண்டுள்ளார் என்பது போலவும் ஊரார் அறிய, பேசிக்கொண்டிருந்தனர். அதனை அமைச்சரான திருவாதவூரர் நம்பவில்லை, அதனைக் குறிக்கவே எள்ளல் குறிப்புத் தோன்றத் துணையான சுற்றங்கள் என்று பேசுகிறார். - அத்தனையும் துறக்தொழிந்தேன்' என்பது அடுத்து நிற்கும் தொடர். அத்தனை என்பது தொகுதியை மட்டும்