பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 முற்றிலுமாக விரித்து எந்த மனிதனுடைய மனத்தில் இந்த ஆசை தோன்றிற்றோ அந்த மனிதனை முழுவதுமாகத் தன்வசமாக்கிவிடுகிறது. அதன் பிறகு அவன் என்று சொல்லிக்கொள்ள அங்கு எதுவுமில்லை; எஞ்சியிருப்பது அனைத்தும் பேராசையின் பல்வேறு வடிவங்களேயாகும். மனிதனுள் தோன்றி அவனையே முழுவதுமாக மறைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பேராசை போக வேண்டுமேயானால் இறைவனின் திருவருள் இருந்தாலன்றி அது ஒருபோதும் நடைபெறாது. அதனையே அடிகளார் பேர் ஆசையாம் இந்தப் பிண்டம் அற, சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான் யார் என்று வினவினால் 'பெருந்துறையான்’ என்க. என்று கூறுகிறார். அடுத்து நிற்பது போர் ஆர் புரம் பாடி என்பதாகும். இறைவன் போர்தொடுக்கக் காரணமாயிருந்த திரிபுரத்தைப் பாடி என்று பொருள்கொண்டால், அது பொருந்து மாறில்லை என்று கருதி, பேரார் புரம்’ என்று பாடங் கொண்டனர் சிலர். இவ்விரண்டுமே பொருந்துமாறுள்ளன. எவ்வாறெனின், போரார் புரம் பாடி' என்பதற்கு இறைவன் போரினை மேற்கொள்ள, திரிபுரம் அழிந்தமை பற்றிப் பாடி என்று பொருள்கொள்ளலாம். போர் என்பத னைப் பேர் என்று மாற்றி, பெருமை பொருந்திய சிவபுரம் என்றும் பொருள் கொள்ளலாம். 285. பாலும்.அமுதமும் தேனுடன் ஆம் பரா பரம் ஆய் கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம், அந் நெறியே போலும் புகழ் பாடிப் பூவல்லி கொய்யாமோ 11 குரைகழல்கள்-ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடி. கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான்’ என்ற தொடரை உள்ளம் குளிர்ந்த கோலம் கொண்டபிரான்