பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 149 TథరI மாற்றுக. உள்ளம் கோலம் இரண்டையும் கூறினமையின் மானிட வடிவில் இருந்த குருநாதரையே இது குறிப்பதாகும். எனவே, குருநாதர் இவரை ஆட்கொள்ள வேண்டுமென்ற குளிர்ந்த உள்ளத்தோடு அழகிய கோலத்தைக் கொண்டிருந்தார் என்க. இங்குக் கூறப்பட்ட குருநாதரின் கோலத்தைக் கண்ட மாத்திரத்தில், அது பாலும், தேனும், அமுதமும் கலந்தது போன்ற இனிமையும் பெருமையும் தருவதாய் இருந்தது. ஞாலத்தில் உள்ளவர்கள் பிரான் குரை கழல்கள் பரவுவார்; அந்நெறியே நன்னெறியாம்; (அவன்) புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ என்கிறார். 286. வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும் கோன் அவன் ஆய் நின்று கூடல் இலாக் குணக் குறியோன் ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ 12 ‘வானவன் மால் அயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோன் அவனாய் நின்ற’வன். அவன் தனித்து நிற்பவன்; குணங்குறி இல்லாதவன். (கூடல் இலாது). பிற உயிர்களைக் காப்பான்வேண்டி, கடலில் தோன்றிய ஆலகாலத்தை எடுத்து விழுங்க, அதுவே அவனுக்குப் போனகம் (விரும்பியுண்ணும் உணவு) ஆயிற்று என்க. 287 அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்தோறும் நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றைப் பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 13