பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆர-நிரம்ப, தாது-மகரந்தம். அன்று ஆலின்கீழ் இருந்து அருமறைகள் (அறிய வேண்டிய ரகசியம்) அருளியவன்-வானவர், மாமுனிவர் நின்று நாள்தோறும் நன்றாக, ஆர ஏத்தும் நிறைகழலோன். நிறைகழல் என்ற வினைத்தொகையில் கழல் என்பது கழலை அணியும் திருவடிகளை உணர்த்தி நின்றது. அருள் நிறை கழல் என்பதை முக்காலத்துக்கும் விரிக்க 288. படம் ஆக என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து இங்கு இடம் ஆகக் கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான் தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ 14 படம்-சித்திரம். இணைப் போது-இரண்டு திருவடி மலர்கள். ‘தம் திருவடிக் கமலம் இரண்டின் முன் பகுதிகள் (பாதங்கள்) என்னுள்ளே படமாக பதியுமாறு திருவடி தீட்சை செய்து, என் உள்ளத்தையே தன் இருப்பிடமாகச் செய்து கொண்டவன் ஏகம்பம் மேவிய பெருமானாம்’ என்க. திருவடி தீட்சை செய்யும்போது, திருவடிகளின் முன்பகுதியிலுள்ள கட்டை விரல்கள் இரண்டையும், தீட்சை பெறுபவரின் உச்சந்தலையில், சகஸ்ர தளம் உள்ள இடத்தில் பதிக்க வேண்டும் என்று கூறுவர். 289. அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் பங்கம் இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 15