பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 151 அந்தகன்-இயமன் அல்லது அந்தகாசுரன். கூற்றன்-அவன் தூதன். சிவபெருமானால் உரம் குலைந்தவர்கள் பட்டியல் இப்பாடலில் தரப்பெற்றுள்ளது. அந்தகாசுரன், இராவணன் இருவரும் தவிரப் பாடலில் குறிப்பிடப்படும் ஏனையோர் அனைவரும் தக்கன் வேள்வித் தகர்தின்றவர் ஆவார்கள். 'பங்கம் இல் தக்கன் என்றது வெட்கம் இல்லாத தக்கன் என்ற பொருளைத் தரும். 290. திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு மண்பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 16 போர் ஏறு-போரிற் சிங்கம்போன்றவன். தண்டாலே பணிகொண்டகைத்தடியால் அடிக்கப்பெற்ற. போர் செய்கின்ற ரிஷப் வாகனத்தை உடையவனும் சிவபுரத்துப் போர் ஏறு போன்றவனும், மதுரையில் பிட்டமுது செய்தவனும் ஆகிய ஒருவனை (தன்னை), பாண்டியன் பணிகொண்டதால் அவனுக்கு ஏற்பட்ட புண்ணைப் பாடுவோமாக, இப்பகுதிக்கான மற்றொரு பொருளைப் பின்னுரையில் காணலாம். 291. முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 17