பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 முன் ஆய-எல்லாத் தேவர்களிலும் முதன்மை ஆய. தானவர்அசுரர். இலங்கு அணியாம் பல் நாகம்-விளங்குகின்ற ஆபரணங்களாகிய பல பாம்புகளை. ‘மால் அயனும், வானவரும், தானவரும் பொன்னார் திருவடியைக் கண்டு அறியராயினும் போற்றுவதைக் கடமையாகக் கொண்டனர். ’ § என் உள்ளத்தின் உள்ளே புகுந்து என்னை ஆட்கொண்டவன் அணிந்துள்ள நாகங்களைப் போற்றிப் பாடுவோமாக, தேவர் முதலியோர் திருவடிகளை அறியாதிருந்தும் போற்றினர் என்பதால், தம் உள்ளே புகுந்து தம்மை ஆட்கொண்ட திருவடிகளைப் போற்றாமல் இருப்பது முறையற்றது என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளது பாடலின் பிற்பகுதி. 292. சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே ஆராத ஆசை அது ஆய் அடியேன் அகம் மகிழ தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ 18 இதுவரை திருவாசகத்தில் இடம்பெறாத ஒரு புதிய கருத்து இப்பாடலில் இடம்பெறுகிறது. குதிரையின்மேல் வந்த வாதவூரர் முதலில் கண்டது மானிட வடிவில் இருந்த குருநாதரின் திருவுருவையேயாம். அந்தத் திருவுருவம் பூமி யில் கால்பதித்து இருந்தும்கூட, அடிகளார் அந்த வடிவை, சிவனெனத் தேறியதாக, சிவனென யானும் தேறினன் காண்க என்று தாமே சொல்லியுள்ளார். இந்த நிலையில் அந்தக் குருநாதரின் திருவடி, அடிகளாரின் சகஸ்ரதளத்தில் சம்பந்தப்படுகிறது. உடனடியாக மணிவாசகர் பிறக்கிறார். அதே விநாடியில் எதிரே இருந்த குருநாதர் மறைந்து, உமையொருபாகன் காட்சியளிக்கிறான். இதுவரை