பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 153 அடிகளாரின் இறையருள் அனுபவத்தில் தோன்றிய பல்வேறு படிகளாகும் இவை. இதனை அடுத்து ஒரு காட்சி கிடைத்ததுபோலும், அக்காட்சி கிடைக்க ஒரு காரணமும் இருந்தது. குருநாதராக இருந்தவர் வாய் திறந்து பேசிய சொற்களாகும் அவை. கோலம் ஆர்தரு பொதுவினில் வருக திருவாச2128) என்பவை அச்சொற்கள். இவை காதில் விழுந்தவுடன் பொதுவினில் நடஞ்செய்கின்ற பெருமானுடைய வடிவு, அடிகளாரின் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும். எதிரே உள்ள மானுட வடிவில் இருந்த குருநாதரின் ஆணையில் பிறந்த இந்தச் சொற்கள், தில்லைக்கூத்தன் வடிவை அடிகளார் உள்ளத்தில் தோற்றுவித்தது உண்மைதான். தமக்கு ஆணையிட்ட குருநாதரை மணிவாசகர் இப்பொழுது மறுபடியும் பார்க்கிறார். குருநாதர் மறைந்துவிட்டார்; உமையொருபாகன் மறைந்து விட்டான்; என்ன அதிசயம்! இவர்கள் காட்சியளித்த அதே இடத்தில் தில்லைக் கூத்தன் நடமிடுகின்றான். மானிட குருநாதரும், உமையொருபாகனும், தில்லைக் கூத்தனும் ஒருவனே என்ற நினைவு வந்தபோது, இப்பாடலின் மூன்று, நான்காவது அடிகள் வெளிவரு கின்றன. திருப்பெருந்துறையான் திருநடம் செய்வதைக் காண்டது பேரானந்தம் என்கிறார் அடிகளார். ‘சிறப்புப் பொருந்திய தில்லைக் கூத்தனின் சிலம்பி னின்று தோன்றும் (சிலம்பும்) ஒலியைக் கேட்பதற்கே, என் அகம் ஆராத ஆசையதாய் ஏங்கிற்று. அதைக் கேட்டு மகிழ வாய்ப்புத் தந்து திருப்பெருந்துறை வீதிகளில் திருநடம் செய்தான். அதனைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ” என்றபடி.