பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 293. அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவு கொண்டு இவ்வுலகில் பிள்ளையும் ஆய் முத்தி முழு முதல் உத்தரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ 19 அத்தி-யானை. யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்டமையின் "பித்த வடிவு' என்றார். யானையை உரிக்கின்ற அளவிற்கு வீரம் பொருந்திய இளைஞன் என்று நினையற்க; அதே நேரத்தில் இவன் குழந்தையாகவும் ஆகக்கூடியவன். உத்தரகோசமங்கையிலுள்ள இவன் பிறவா நெறியாகிய முத்திக்கு முழுமுதல் தலைவனாகவும் உள்ளான் என்பதைப் பாடுவோமாக, நான்காவது அடியில் ‘புத்தி புகுந்தவா என்பது ஒரு புதிய சிந்தனையாகும். உள்ளம் புகுந்தவன் என்றும், மனம் புகுந்தவன் என்றும் இதுவரை பலமுறை பாடியுள்ளார். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக் கரணத்தின் மூன்றாவதாகவுள்ள புத்தி, இதுவரை பேசப் பெறவில்லை. மனத்திலும் சித்தத்திலும் ஒரு பொருள் சென்று தங்கமுடியும். அதன் எதிராக, இந்த மனமும் சித்தமும், தாங்கள் சென்று, ஒரு பொருளைப் பற்றிக் கொண்டு அதன்மாட்டு நிற்பதில்லை. தலைவிமாட்டு அல்லது தலைவன்மாட்டு மனம் சென்றது என்று இலக்கியம் கூறினும், அது உபசார வழக்கேயாம். மனம், சித்தம் என்ற இரண்டின் செயல் இவ்வாறாகும். இதன் எதிராக, புத்தி தானே சென்று ஒரு பொருளிடத்துத் தங்கும் இயல்புடையது. மனம், சித்தம் என்பவைபோல எந்த ஒன்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் இயல்பு புத்திக்கில்லை. அதன் மறுதலையாக, எந்த ஒரு பொருளை