பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இந்த இறையனுபவ வளர்ச்சியின் நுணுக்கத்தைப் ‘புத்தி புகுந்தவா என்ற இரண்டு சொற்களால் அடிகளார் விளக்கினார். 294. மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான் கோ ஆகி வந்து எம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூ ஆர் கழல் பரவிப் பூவல்லி கொய்யாமோ 20 மா-குதிரை. தேவார்ந்த கோலம்-தெய்வத்தன்மை நிறைந்த திருவுருவம். இந்தப் பாடல் மகா சமாசப் பதிப்பிலும், மர்ரே அண்டு கம்பெனி வெளியிட்ட பதிப்பிலும் பிற்சேர்க்கை யிலே சேர்க்கப்பெற்றுள்ளது) குதிரையின்மேல் ஏறி, மதுரை நகர் புகுந்து, தனது தெய்விகக் கோலத்தைக் காட்டி, என்னை ஆட்கொண்ட வனாகிய பெருந்துறையான் புகழைப் பாடிப் பூவல்லி கொய்வோமாக என்றபடி,