பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவுந்தியார் . 167 பன்னிரண்டு பாடல்களிலும் (299-310) தக்கன் வேள்வி பற்றிய செய்திகளைப் பாடுகிறார். இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் சிவபிரான் பங்குகொள் கிறார். திரிபுர நிகழ்ச்சியில் நேரிடையாகப் பங்கேற்றாலும் எவ்விதச் செயலையும் புரியாமல் புரங்களை அழித்தார். அதிலும்கூட மூவர் காப்பாற்றப்படுகின்றனர். எந்தப் பேரழிவின் நடுவேயும் அடுத்துத் தோன்றும் புதிய வளர்ச்சியின் அங்குரம் முளை) இடம் பெற்றிருக்கும் என்பதை இச்செய்தி அறிவிக்கிறது. தக்கன், வேள்வி அழிப்பில் சிவபெருமான் நேரே பங்கு கொள்ளவில்லை. வீரபத்திரரைத்தான் அனுப்புகிறார். வேள்வியில் பங்குகொண்ட அனைவரும் தண்டிக்கப்படு கிறார்களே தவிர, யாரும் அழிக்கப்படவில்லை. ஒரளவு சிந்தித்தால் திரிபுரத்தின் அழிவிற்கும், தக்கன் வேள்விச் சிதைவிற்கும் ஒரு வேறுபாடு இருப்பதுபோலத் தோன்றுகிறது. திரிபுராதிகள் ബIT பலத்தால் அனைத்தையும் பெற்றதுடன் நீண்டகாலம் சிவபூஜை செய்து நன்னெறியில் இயங்கினர். நாளாவட்டத்தில் அதிகார வெறி அவர்கள் தலைக்கு ஏறவே, அழிய நேர்ந்தது. இவர்கள் மூலப்பொருளாகிய சிவபெருமானை மறந்தார்களே தவிர, அவனை நிந்திக்க வில்லை. அவனைவிடத் தாங்கள் மேம்பட்டவர்கள் என்று கருதவுமில்லை. எனவே, எளிதாக மரணத்தைப் பெற்று, அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டனர். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும் தக்கன் வேள்விக் கதை. தக்கன், யாகத்தைச் செய்த ஆச்சாரியன், அவிசை உண்பதற்காக வந்திருந்த தேவர்கள் முதலியோர்,