பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நான்முகனும் யாக புருஷனாகிய தக்கனும் பட்டதைக் கண்டு புரந்தரனாகிய இந்திரன், மிக உயர்ந்தவர்களாகிய நான்முகனும் தக்கனுமே இந்தக் கதியை அடைந்தார்கள் என்றால் நான் எங்கே போய் எப்படித் தப்பிப்பது என்று வருந்தினான் என்க. 309. சூரியனார் தொண்டை வாயினில் பற்களை வாரி நெரித்த ஆறு உந்தீ பற மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற 15 மயங்கிற்று-கலங்கியது. சூரியனார்-பூஷா என்னும் சூரியன். பன்னிரு ஆதித்தருள் ஒருவனாகிய பூடன் என்பவனுடைய பற்களைத் தொண்டையோடு வைத்து நெரித்ததைப் பாடுக. 310. தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன் மக்களைச் சூழ நின்று உந்தீ பற மடிந்தது வேள்வி என்று உந்தீ பற 16 மடிந்தது-அழிந்தது. தக்கன் வேள்வி முடிவதற்கு முன்னரே தலை இழந்தான். என்றாலும், அவன் மக்கள் சூழநின்றார்கள் ஆதலின் அவர்களை முன்னிலைப்படுத்தி இந்த யாகம் முடிந்திருக்கலாம் என்றால், இல்லை என்கிறார் அடிகளார். மக்கள் சூழ நின்றாலும்கூட யாகம் முற்றுப் பெறவில்லை. ஏனென்றால், தக்கனுடைய அறுபட்ட தலை, யாகத் தீயில் விழுந்தமையின் யாகம் தடைப்பட்டு விட்டது (மடிந்தது) என்க 295 முதல் 298 வரையுள்ள நான்கு பாடல்களிலும் திரிபுர தகனத்தைக் கூறிய அடிகளார், அடுத்து வந்துள்ள