பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவுந்தியார் . 165 305. ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக் கூட்டியவா பாடி உந்தீ பற கொங்கை குலுங்க நின்று உந்தீ பற ‘It நான்முகனுக்கு விதி என்ற பெயர் உண்டாதலின் அவருடைய மகனாகிய தக்கன் சிறுவிதி எனப்பெற்றான். அந்தத் தக்கனுக்கு ஆட்டின் தலையை வைத்ததுபற்றிப் பாடுவதன் மூலம் சிவபெருமான் புகழைப் பாடுவீர்களாக 306. உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே கண்ணைப் பறித்தவாறு உந்தீ பற கருக் கெட நாம் எல்லாம் உந்தீ பற 12 பகன்-சூரியன். அவிர்பாகத்தை உண்ணத் தொடங்கிய பன்னிரு சூரியருள் ஒருவனாகிய பகன் கண்களைப் பறித்தமை பற்றிப் பாடுவோமாக. இவ்வாறு பாடுவதால் நாம் இனிப் பிறவோம் (கருக்கெட) என்க. 307. நா. மகள் நாசி சிரம் பிரமன் பட சோமன் முகம் நெரித்து உந்தீ பற தொல்லை வினை கெட உந்தீ பற 13 நான்முகனுடைய ஐந்து தலைகளுள் ஒரு தலை அறுக்கப்பட்டதையும், நாமகள் நாசி அறுக்கப்பட்டதையும், சந்திரன் முகம் தேய்க்கப்பட்டதையும் பாட, நம்முடைய பழவினைகள் போகும். 308. நான்மறையோனும் மகத்து இயமான் பட போம் வழி தேடும் ஆறு உந்தீ பற புரந்தரன் வேள்வியில் உந்தீ பற 14 மகத்து இயமான்-யாகத்தில் எஜமானனாயிருந்த தக்கன்.