பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 302. பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற பனை முலை பாகனுக்கு உந்தீ பற 8 பர்வதராஜன் மகளாகிய உமாதேவியை இறைவி என்றும் பாராமல் தக்கன் வசைபாடினான். எனவே, நம்மால் வணங்கப்படும் தாட்சாய்ணியின் தந்தையாயிற்றே என்று அவன்பால் கண்ணோடாமல் வசைபாடுவாயாக' என்றவாறு. 303. புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி மரம்தனில் ஏறினார் உந்தீ பற வானவார் கோன் என்றே உந்தீ பற 9 வீரபத்திரனுக்கு அஞ்சிய இந்திரன் குயில் உருவம் கொண்டு மரத்தின்மேல் ஏறி ஒளிந்துகொண்டான். 304. வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை துஞ்சினவா பாடி உந்தீ பற தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற 10 வியாத்திரன் என்பது செல்லவேண்டிய வழியை விட்டு வேறு வழியில் செல்வோன் என்பதாகும். இப்பெயர் தக்கனுக்கு உரியது. அவன் சிவபெருமான்மேல் கொண்ட சினத்தோடு யாகம் புரிய, அதன் பலனாக அவன் தலை போயிற்று என்பதாகும். தக்கன் வேள்வியில் வீரபத்திரன் செய்த இவ்வரச் செயல்களைப் பாடப்பாட நம்மைத் தொடர்ந்து வரும் பிறப்புச் சங்கிலி அறுபடும் என்க.