பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவுந்தியார் 163 எய்ய வல்லான் என்ற சொற்றொடர்கூட அவன் ஆற்றலைக் குறித்ததேதவிர, அவன் எதனையும் எய்ததாகக் கூறவில்லை. 299. சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஒடியவா பாடி உந்தீ பற உருத்திர நாதனுக்கு உந்தீ பற - 5 சாடிய-விரயத்திரர்தாக்கிய சரிந்திட-அழிய. உருத்திரநாதன்உருத்திரர்களுக்கெல்லாம் தலைவன். தக்கன் செய்த யாகத்தைச் சென்று சாடி, வீரபத்திரன் தண்டிக்கத் தொடங்கியவுடன் தேவர்கள் ஓடினர். இது உருத்திரநாதன் பெற்ற வெற்றியேயாகும். 300. ஆ ஆ திருமால் அவிப் பாகம் கொண்டு அன்று, சாவாது இருந்தான் என்று உந்தீ பற சதுர்முகன் தாதை என்று உந்தீ பற 6 சதுர்முகன்-பிரமன். சதுர்முகன் தாதை ஆகிய திருமால் தக்கன் வேள்வியில் அவிர்பாகத்தைப் பெற்றான் எனினும் வீரபத்திரரிடம் தண்டனை பெற்று மயங்கிக் கிடந்தான். 301. வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான் என்று உந்தீ பற கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற 7 அக்கினி தேவனானவன் முழுவதுமாக வாயிலிட்டுக் கொள்ள அவிர்பாகத்தை திரட்டிய கையை வீரபத்திரன் துணித்தான் என்க.