பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இயல்பாகவே திரிபுரத்தில் அமைந்து இருந்தன. அடங்கியிருந்த அந்த அடிப்படைகள் இப்பொழுது வெளிப்பட்ட காரணத்தால் திரிபுரங்கள் தாமே அழிந்தன. இக்கருத்தை வலியுறுத்தவே அழிந்தன என்ற தன்வினை வாய்பாட்டுச் சொல்லைப் பயன்படுத்துகிறார் அடிகளார். அப்படியானால் 'திரிபுராந்தகன்’ என்ற பெயர் சிவபெருமானுக்கு எப்படிப் பொருந்தும்? முழுப்பொரு ளாக உள்ள இறைவன் எந்த ஒன்றையும் செய்தான் என்பது உபசார வழக்கு. திரிபுரத்தின் அடியில் தங்கியிருந்த அழிவுக்குரிய அடிப்படைகள் இப்பொழுது மேலே வருமாறு இச்சாமாத்திரத்தில் செய்ததுதான் இறைவன் செயலாகும். இந்த நான்கு பாடல்களிலும் இறைவன் எந்த ஒன்றையும் செய்தான் என்று அடிகளார் கூறவேயில்லை. ഖിഭാഖ வளைத்தான் என்றோ, பூசலை விளைவித்தான் என்றோ, முப்புரத்தை எரித்தான் என்றோ சொல்லவில்லை. அவன் கையில் ஒர் அம்பு இருந்தது என்றுதான் கூறப்பட்டதே தவிர அந்த அம்பை அவன் பயன்படுத்தினான் என்று சொல்லவில்லை. அடுத்து, விஸ்வகர்மா செய்த தேரை உடைக்க வேண்டும் T೯ அவன் எதுவும் செய்யவில்லை. அடியை எடுத்து வைத்தான் அச்சு முறிந்தது. அடி வைத்ததும் அச்சு முறிந்தது என்பதை உடன் நிகழ்ச்சிப் பொருளாகக் கொள்ளவேண்டுமே தவிர, காரண காரியப் பொருளாகக் கொள்வது தவறு.