பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவுந்தியார் . 161 ஒருமூவர்-தாரகாசுடின், கமலாகூடின், வித்யுன்மாலி என்பாரும் Q_6tssf. - எந்தப் பேரழிவிலும் பிழைத்துக்கொள்ள வேண்டிய தகுதியுடைய மூவர் (சுதன்மன், சுசீலன், சுபுத்தி) திரிபுர சம்ஹார காலத்தில் அதனுள் இருந்தனர். திரிபுரம் மூன்றையும் வேரோடு அழித்த சிவபெருமான் அதனுள் இருந்த இந்த மூவருக்கும் எவ்வித ஊறும் நேராமல் பாதுகாவல் செய்துவிட்டு, திரிபுரத்தை அழித்தான் என்கிறார். அனைத்தும் அழியும்போது பிழைக்க வேண்டியவை அந்த அழிவினுள் இருந்தாலும் அவற்றைமட்டும் காப்பாற்றிவிட்டு, ஏனையவற்றை அழிக்கும் பேராற்றல் உடையவன் சிவபெருமான் என்று அவனைப் பாடிக் கொண்டு, பறந்து விளையாடுங்கள், “எய்யவல்லானுக்கு என்ற தொடரைக் கண்டவுடன் அம்பை எய்யவல்லானுக்கு என்ற பொருள் மனத்திடைத் தோன்றும். இங்கு அம்பு எதுவும் பயன்படுத்தப்படவில்லை; ஆதலால், அப்பொருள் பொருந்தாது. எனவே, அம்புக்குப் பதிலாகப் பேரழிவை என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் பொருள் நேரிதாக இருக்கும். பேரழிவை எய்ய (செலுத்த வல்லானுக்கே உந்தீ பற என்று கொள்ளுதல் பொருந்தும். முன்னைய பாடலில் (திருவாச 297) அழித்தனன் முப்புரம்' என்று சொல்லவேண்டிய இடத்தில் அழிந்தன முப்புரம்' என்று கூறியுள்ளார். சிவனுடைய தேரோ, அம்போ பயன்படுத்தப்படவில்லை என்பதும், வேறு எந்த உபகரணங்களைக் கொண்டும் இது செய்யப்படவில்லை என்பதும் அழிந்தன என்ற சொல்லால் பெறப்பட்டது. அழிதற்குக் காரணமாகிய சில அடிப்படைகள்