பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 297. தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும் அச்சு முறிந்தது என்று உந்தீ பற அழிந்தன முப்புரம் உந்தீ பற 3 இப்பாடலில் தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும் என்ற அடிக்கு வாயு புராணக் கதையின் அடிப்படையில் விஸ்வகர்மா செய்து தந்த பொன்னாலாகிய தேர் என்று பொருள் கொள்வது பொருத்தமுடையதாகத் தெரிகிறது. அதன்படி விஸ்வகர்மா (முயன்று தச்சுப்பணி செய்து பொன்னாலாகிய தேரைத் தந்தான். 'தன்னால் செய்யப்பட்ட தேர் மிகவும் வலுவானது, சிவபெருமானே ஏறுவதற்குத் தகுதி வாய்ந்தது, திரிபுரத்தை அழிக்கப் பயன்படப்போகிறது என்றெல்லாம் நினைந்து, அவன் தருக்குக் கொண்டிருத்தல் வேண்டும். அதனை உணர்ந்த பெருமான் அந்தப் பொற்றேரின் மேல், தம் ஒரு திருவடியை எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது; விஸ்வகர்மாவின் அகந்தையும் அழிந்தது. இவ்வாறு நேரே பொருள் கொள்வதே சிறந்ததாகும். போருக்குப் புறப்படு வதற்கு முன்னரே தேரின் அச்சு முறிந்துவிட்டது என்றால், சிவபெருமான் போருக்குப் புறப்பட முடியாமல் தடை நேர்ந்திருக்கும் என்று நினைப்பவர்களை நோக்கி, இந்தத் தேரையோ, கையில் உள்ள அம்பையோ நம்பிக்கொண்டு அவன் புறப்படவில்லை, இந்தத் தேரையும் அந்த அம்பை யும் பயன்படுத்தாமலே தான் நினைத்ததைச் செய்தான் என்ற கருத்தை 'அழிந்தன முப்புரம்- உந்தீ பற’ என்று பாடுகிறார். 298. உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு எய்ய வல்லானுக்கே உந்தீ பற இள முலை பங்கன் என்று உந்தீ பற 4