பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவுந்தியார் . 159 ஆனாலும், பல்வேறு விதமாக வடிவெடுத்துள்ள இந்தக் கதையில் போர் நிகழ்ந்ததாக எந்தக் கதையும் சொல்லவில்லை. பூசல் என்ற சொல்லுக்குப் போர் என்ற பொருள் உண்டேனும், இங்குப் போர் என்ற ஒன்று நிகழாமையின் ஆரவாரம் என்ற பொருளே கொள்ளப் பெற்றது. 'உளைந்தன முப்புரம்' என்றும், 'ஒருங்குடன் வெந்தவாறு என்றும் தனித்தனியே பேசப்படுதலின் இருவகையாகப் பொருள் கொள்ளப்பெற்றது. உளைதல் என்பது உயிர் உடையவர்கட்கே நிகழ்தலின் முப்புரத்தில் உள்ளவர்கள் என்று பொருள் கொள்ளப்பெற்றது. 296. ஈர் அம்பு கண்டிலம், ஏகம்பர் தம் கையில் ஒர் அம்பே முப்புரம் உந்தீ பற ஒன்றும் பெரு மிகை உந்தீ பற 2 போருக்குச் செல்பவர்கள் சாதாரணமாகப் படைக் கலங்களை ஒற்றையாக எடுத்துச் செல்வதில்லை. ஆனால், சிவபெருமான் ஒரே ஒர் அம்பை எடுத்துச் சென்றார் என்று முதலிரண்டு அடிகள் பேசுகின்றன. ஏகம்பநாதனின் கையில் இரண்டு அம்பை நாங்கள் காணவில்லை; ஓர் அம்பே முப்புரத்தை அழித்தது என்று கூறியபின்னர், மூன்றாவது அடியில் இக்கருத்து மாற்றிப் பேசப்படுகின்றது. அதாவது ஒர் அம்பே முப்புரத்தை அழித்தது என்று கூறுவதுகூடச் சரியன்று. அந்த ஒற்றை அம்புகடத் தேவைப்படாத, தேவைக்கு மேற்பட்ட மிகையாக இருந்தது’ என்றவாறு. 'ஒன்றும் பெருமிகை என்று கூறியதால், கையில் இருந்த அந்த ஒற்றை அம்பைக்கூடப் பயன்படுத்தவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். -