பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அமைக்கப்பெற்றுள்ளன. வளைந்தது வில்லு (திருவாச 295) என்பதில் குந்தியவர்கள் எழுவதும், விளைந்தது பூசல் என்பதில் எழுந்தவர் పు} శ్రీశ్రి గ్ర{{T விரித்து இரண்டு தப்படிகள் ஒரே குதியாகக் குதிப்பதும் நிகழ்கின்றன. இரண்டாவது அடியாகிய உளைந்தன முப்புரம் உந்தீபற’ என்பதின்போது, சிறகுகளை அசைக்குமாப்போல் கைகளை அசைத்தபடி குந்துதல் இடம்பெறும். அடுத்துவரும் மூன்றாவது அடியாகிய ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற’ என்பதன் போது பறவைகளின் செயல்கள் போன்ற சில செயல்கள் அபிநயிக்கப்படும். திரும்பவும் அடுத்த பாட்டின் முதலடியில் இரண்டு சீர்களிலும் குந்தியவர்கள் எழுவது இடம்பெறுமாறு கற்பனையில் காட்சிகளை வகுக்க முடிகிறது. 295. வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீ பற ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற 1 வில்லு-மேரு உகரம் சாரியை. இந்தப் பாடலும், இதனை அடுத்து வருகின்ற மூன்று பாடல்களும் சிவபெருமான் திரிபுரத்தை அழித்த கதையைக் கூறுவனவாகும். பதினெண் புராணங்களுள் ஒன்றாகிய வாயுபுராணத்தில் இடம் பெற்றுள்ள இக்கதை வளர்ந்து வளர்ந்து, பல புதிய சேர்க்கைகளோடு எட்டாம் நூற்றாண்டில் ஒரு வடிவைப் பெற்றுள்ளது. 'வில் வளைந்தது; போருக்குரிய ஆரவாரம் தொடங் கிற்று. தொடங்கிய ஒரு விநாடிக்குள் முப்புரவாசிகள் தொலைந்துபோயினர். அதில் உள்ளவர்கள்மட்டும் அல்லாது வலுவான கோட்டைகளும் ஒருங்கே எரிந்தன. என்றவாறு, :