பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருவுந்தியார் . 169 அடிகளார் போன்ற அருளாளர்கள் ஒரு துணுக்கத்தை வைத்துக் காட்டுகிறார்கள். அறியாமையின் அழிவுபற்றிக் கூறுவன நான்கு பாடல்கள்; ஆணவத்தின் அழிவுபற்றிக் கூறுவன பன்னிரண்டு பாடல்கள். 311. பாலகனார்க்கு அன்று பாற் கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே உந்தீ பற குமரன் தன் தாதைக்கே உந்தீ பற 17 பாலகன்-உபமன்யு. கோலம்-அழகு. புலிக்கால் முனிவனுடைய மகனாகிய உபமன்யு முனிவனுக்குப் பாற்கடலையே வரவழைத்துத் தந்தவன் யார் தெரியுமா? குமரப்பெருமானுடைய தாதையாவான் அவன். அவன் புகழைப் பாடி ஆடுக. 'பிள்ளையைப் பெற்றவர்க்கே பிள்ளையின் அருமை தெரியும்’ என்ற இற்றை நாள் 'பழமொழி அடிகளார் வாக்கிலும் வெளிப்படுகிறது. குமரன் தாதை ஆதலின் மற்றொரு குமரனுக்குப் பாற்கடலை வருவித்தான் என்க. 312. நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற உகிரால் அரிந்தது என்று உந்தீ பற 18 உகிர்-நகம். மலரின்மேல் இருந்தவனாகிய நான்முகனுடைய தலையைச் சிவபெருமானால் அனுப்பப் பெற்ற பைரவர் தம் நகத்தால் கிள்ளி எடுத்தார் என்க.