பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 313. தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம் ஒர் ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற இருபதும் இற்றது என்று உந்தீ பற 19 மலையெடுத்தான்-கயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணன். இராவணன் தேர் கயிலையைக் கடந்து செல்லாது நிற்க, கீழே இறங்கிய இராவணன் அக்கயிலை மலையையே பெயர்க்க முற்பட்டான். இறைவன் தன் கட்டை விரலை ஊன்றி அவனுடைய இருபது தோள்களையும் நெரித்தான் என்க. இறுதல் என்பது நைந்து போதல் எனும் பொருளைத் தருவது ஆகும். 314 ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் ஆகாசம் காவல் என்று உந்தீ பற அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற 20 ஏகாசம்-உத்தரீயம். இருடிகள்-விண்செலல் மரபினராகிய வாலகில்லியர்கள். கதிரோடு திரிதரும் அமரரும் முனிவரும் ஏகாசமிட்ட இருடிகள் எனப்பட்டனர். உலகத்து உயிர்களைக் கதிரவன் வெப்பம் தாக்கிவிடாமல் காவல் செய்பவர் இவர்கள் என்க. இவ்வளவு பேருபகாரம் செய்கின்ற இவர்களுக்கும், சூரியமண்டலம் தாண்டி உள்ள பிறருக்கும் காவலாக உள்ளவன் சிவபெரும்ான் என்க.