பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருத்தோணோக்கம் |பிரபஞ்ச சுத்தி, தோணோக்கத்திற்கு முன்னர் அமைந்துள்ள திருச் சாழல் மகளிர் வட்டமாக நின்று தோளை வீசி விளையா டும் விளையாட்டு என்று விளக்கப்பெற்றது. தோள் வீச்சு என்று கூறியவுடன் ஏதோ இருந்த இடத்தில் இருந்து கொண்டு தோள்களைமட்டும் அசைப்பது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. தோள்+நோக்கம் என்று தலைப்பிருந்தாலும் தோள்வீச்சு என்பதே பொருளாகும். கையை வீசும் பொழுது கண்பார்வையும் அதன்வழிச் செல்லவேண்டும் என்பது நாட்டிய நூலாரின் துணிபு ஆதலின் தோள்வீச்சு என்பது நாளாவட்டத்தில் தோள் நோக்கம் என்று மாறி இருக்க வேண்டும். தோள்வீச்சு என்று பெயரிருப்பினும் அது உண்மையில் கைகளை வீசி ஆடும் ஆட்டமே ஆகும். நாட்டிய சாத்திரத்தில் கைகளை வீசிப் பத்துவகைச் செயற்பாடுகள் நிகழ்த்தலாம் என்று சொல்லப்பெற்றுள்ளது. அதுவும் கைவீச்சு என்று சொல்லப்படாமல் தோள்வீச்சு என்றே சொல்லப்படுகிறது. எண்டோள் வீசி நின்று ஆடும் பிரான் (திருமுறை: 4-9-2) என்று நாவரசர் பெருமான் இறைவனைக் குறிப்பிடுகின்றார். இங்கும் தோள்வீசுதல் என்பது கைகளை வீசுதலையே குறிக்கும்.